Épargne-études pour votre enfant

Brochure : REEE

இப்போதும் நாளையும்

நாங்கள் ஆற்றும் பணிகள் அனைத்திலும் சிறந்து விளங்குதல் 

பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டம்: உங்கள் பிள்ளையின் கல்விக்கான சேமிப்பைத் திட்டமிடவும்

CANLEARN.CA / CIBLETUDES.CA

பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டம்

உயர் பாடசாலைக் கல்வியை அடுத்து உங்கள் பிள்ளை தொடர்ந்து கல்வி கற்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கிறீர்களா? பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டம் ஒன்றைக் கொண்டு நீங்கள் உங்கள் பிள்ளையின் எதிர்காலத்துக்கான சேமிப்பில் ஈடுபட கனடிய அரசாங்கத்தால் உங்களுக்கு உதவ முடியும்.

பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டம் என்றால் என்ன?

பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டம் [Registered Education Savings Plan (RESP) / Régime enregistré d'épargne-études (REEE)] என்பது கனடிய அரசாங்கத்திடம் பதிவுசெய்த கல்விச் சேமிப்புக் கணக்காகும். உயர் பாடசாலைக் கல்வியை அடுத்து உங்கள் பிள்ளை கல்வி பயில நீங்களோ, உங்கள் குடும்பமோ, நண்பர்களோ பணம் சேமிக்க அது உதவும்.

வங்கி அல்லது கூட்டுறவு நிதியகம் போன்ற ஒரு நிதி நிறுவனத்தில் அல்லது சான்றிதழ் பெற்ற ஒரு நிதித் திட்டமிடுநர் அல்லது குழுமத் திட்டம் கையாளுநர் ஊடாக நீங்கள் ஒரு பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டக் கணக்கைத் திறக்கலாம். இந்நிறுவனங்களும், திட்டமிடுநர்களும், கையாளுநர்களும் "பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்ட வழங்குதரப்புகள்" [RESP provider / fournisseur de REEE] எனப்படுவதுண்டு.

எனது பிள்ளையின் கல்விக்கு நான் ஏன் சேமிக்க வேண்டும்?

சேமித்தால் பலன் உண்டு! பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டம் எதையும் கொண்டு, உங்கள் பிள்ளையின் கனவு நனவாக நீங்கள் உதவலாம். தினமும் ஒரு டாலர் சேமித்தால் கூட பெரிய காரியங்களை சாதிக்கலாம்.

உங்கள் பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்ட உதவுதொகைகளுடன், பின்வருவனவற்றையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்:

  • கனடா கற்கை முறி; அத்துடன்/அல்லது

  • கனடா கல்விச் சேமிப்பு மானியம்

கனடா கற்கை முறி என்றால் என்ன?

கனடா கற்கை முறி [Canada Learning Bond (CLB) / Bon d'études canadien (BEC)] என்பது, உயர் பாடசாலைக் கல்வியை அடுத்து உங்கள் பிள்ளை கல்வி பயில இப்பொழுதே சேமிக்கத் தொடங்க உதவியாக கனடிய அரசாங்கத்தால் வழங்கப்படும் $500 ஆகும். கூடுதலாக, உங்கள் பிள்ளைக்கு 15 வயதாகும் வரை ஒவ்வொரு வருடமும் 100 $ என அதிகபட்சமாக 2000 $ பெற இயலும்!

உங்கள் பிள்ளை கனடா கற்கை முறி பெறுவதற்கான தகுதிகள் பின்வருமாறு:

  • உங்கள் பிள்ளை 2003 டிசம்பர் 31-ம் தியதிக்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும்; அத்துடன்

  • சிறார் வரிவிலக்கு உதவிப்படி [Canada Child Tax Benefit / Prestation fiscale canadienne pour enfants] (அல்லது குடும்ப உதவிப்படி) [family allowance / allocation familiale]) என்பதற்கமைய நீங்கள் தேசிய சிறார் மேலதிக உதவிப்படி [National Child Benefit Supplement / Supplément de la Prestation nationale pour enfants] பெறுபவராக விளங்க வேண்டும்.

கனடா கல்விச் சேமிப்பு மானியம் என்றால் என்ன?

கனடா கல்விச் சேமிப்பு மானியம் [Canada Education Savings Grant / Subvention canadienne pour l'épargne-études] என்பது கனடிய அரசாங்கம் உங்கள் பிள்ளையின் பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டக் கணக்கில் சேர்க்கும் பணம் ஆகும். இந்த மானியம் இரு பாகங்கள் கொண்டது:

  1. கனடா கல்விச் சேமிப்பு அடிப்படை மானியம் [Basic Canada Education Savings Grant / Subvention canadienne pour l'épargne-études de base]

    உங்கள் குடும்பம் எவ்வளவு பணம் உழைத்தாலும், நீங்கள் ஆண்டுதோறும் உங்கள் பிள்ளையின் பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டக் கணக்கில் சேமிக்கும் முதல் $2,500 ரின் ஒவ்வொரு டாலருக்கும் 20% தொகையை கனடா கல்விச் சேமிப்பு அடிப்படை மானியம் உங்களுக்குத் தரும்.

    அதாவது, உங்கள் பிள்ளையின் பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டக் கணக்கில் நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு $10 தொகைக்கும் அரசாங்கம் $ 2 சேர்க்கும்.

  2. கனடா கல்விச் சேமிப்பு மேலதிக மானியம் [Additional Canada Education Savings Grant / Subvention canadienne pour l'épargne-études supplémentaire]

    உங்கள் குடும்பத்தின் மொத்த வருமானத்தைப் பொறுத்து, நீங்கள் ஆண்டுதோறும் உங்கள் பிள்ளையின் பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டக் கணக்கில் சேமிக்கும் முதல் $500 ரின் ஒவ்வொரு டாலருக்கும் நீங்கள் மேலதிகமாக 10% அல்லது 20% தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

    அதாவது, உங்கள் பிள்ளையின் பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டக் கணக்கில் நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு $10 தொகைக்கும் அரசாங்கம் $1 அல்லது $ 2 சேர்க்கும்.

    இந்த மானியத்தின் இரு பாகங்களுக்கும் தவறாது விண்ணப்பிக்கவும்.

கனடா கற்கை முறி, கனடா கல்விச் சேமிப்பு மேலதிக மானியம் என்பவற்றை ஒரு பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டக் கணக்கில் மட்டுமே வைத்திடலாம்.

உங்களுக்கு உகந்த பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டத்தை தெரிவுசெய்தல்

பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டங்கள் மூன்று வகைப்படும்: 

  • குடும்ப பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டங்கள் [Family RESPs / REEE familial]: உங்கள் சொந்தப் பிள்ளைகளுள் அல்லது நீங்கள் தத்தெடுத்த பிள்ளைகளுள் ஒருவருக்கு அல்லது பலருக்கு நீங்கள் பணம் சேமிக்கலாம். அவர்கள் அனைவருக்கும் ஒரே குடும்ப RESP/REEE யைப் பயன்படுத்தி நீங்கள் பணம் சேமிக்கலாம்.

  • தனியொருவருக்கான பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டங்கள் [Individual RESP / REEE individuel]: உங்கள் சொந்தப் பிள்ளையோ இல்லையோ எந்த ஒரு பிள்ளைக்கும் தனியொருவருக்கான RESP/REEE கணக்கு ஒன்றைத் திறந்து நீங்கள் பணம் சேமிக்கலாம்.

  • குழுமப் பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டங்கள் [Group RESP / REEE collectif]: உங்கள் சேமிப்பு மற்றவர்களின் சேமிப்புடன் சேர்க்கப்படும். கல்விச் செலவு செலுத்தப்படும் காலத்தில் அந்த சம்பாத்தியம் பகிரப்படும். பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்ட தவணைக்காலம் முழுவதும் ஒழுங்காகப் பணம் செலுத்த வேண்டியிருப்பது வழக்கம். எனினும் ஒவ்வொரு திட்டத்துக்கும் சொந்த விதிகள் உள்ளன.

பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டம் எதையும் தெரிவுசெய்ய முன்னர் போதிய அவகாசம் எடுத்துச் சிந்திப்பது முக்கியம். ஒப்பமிடும் முன்னர் ஒப்பந்தத்தைக் கவனமாக வாசிக்கவும்.

உங்களுக்கு பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டம் வழங்கும் தரப்பிடம் பின்வருவன பற்றிக் கேட்கவும்:

  • நீங்கள் தெரிவுசெய்யக்கூடிய முதலீட்டு வகைகள் (சேமிப்புக் கணக்கு, முறிகள், உத்தரவாத முதலீட்டுச் சான்றிதழ்கள் [GIC/CPG], பல்கூட்டு நிதியங்கள் அல்லது இருப்புகள்);

  • ஒவ்வொரு வகையின் பயன்கள், பாதிப்பு விளையும் வாய்ப்புகள். ஏனெனில் சில முதலீட்டு வகைகள் பிறவற்றை விடப் பாதிப்பு விளைவிக்க வல்லவை;

  • நிருவாகக் கட்டணங்கள்; அத்துடன்

  • நீங்கள் ஒழுங்காகப் பணம் செலுத்தாவிட்டால், அல்லது பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டக் கணக்கு எதையும் மூடினால், உங்களுக்கு விதிக்கப்படக்கூடிய தண்டங்கள்.

நான் பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டக் கணக்கு ஒன்றைத் திறந்து கனடிய அரசாங்க மானியம் பெறுவது எப்படி?

படி 1 – உங்கள் பிள்ளைக்கு சமூக காப்புறுதி இலக்கம் [Social Insurance Number (SIN) / Numéro d'assurance sociale (NAS)] ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும். அது இலவசம். மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும்: 1 800 O-Canada (1-800-622-6232). அல்லது உங்களுக்கு அருகிலுள்ள கனடா சேவை நிலையம் [Service Canada Centre / Centre Service Canada] ஒன்றுக்குச் செல்லவும்.

படி 2 – பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டக் கணக்கு ஒன்றைத் திறப்பதற்கு, உங்களுக்கு விருப்பமான ஒரு பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்ட வழங்குதரப்புடன் தொடர்புகொள்ளவும்.

உங்கள் தேவைகளுக்கு மிகவும் உகந்த பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டத்தையும், பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்ட வழங்குதரப்பையும் தெரிவுசெய்து, பின்வருமாறு கேட்கவும்:

  • கனடா கற்கை முறி மற்றும் கனடா கல்விச் சேமிப்பு மானியம் என்பவற்றை அவர்கள் வழங்க முன்வருகிறார்களா;

  • எவ்வகையான பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டங்களை (குடும்பம், தனிநபர் அல்லது குழுமத் திட்டங்கள்) அவர்கள் வழங்க முன்வருகிறார்கள், அவை ஒவ்வொன்றின் பயன்கள், பாதிப்பு விளையும் வாய்ப்புகள் எவை;

  • எத்தகைய முதலீட்டு வகைகளை அவர்கள் வழங்க முன்வருகிறார்கள், அவை ஒவ்வொன்றின் பயன்கள், பாதிப்பு விளையும் வாய்ப்புகள் எவை; அத்துடன்

  • அவர்களுடைய நிருவாகக் கட்டணங்கள், தண்டங்கள் எவை.

உங்கள் பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்ட வழங்குதரப்பிடம் [RESP provider / fournisseur de REEE]. நீங்கள் கேட்கவேண்டிய வினாக்களின் நிரலுக்கு CanLearn.ca (ஆங்கிலம்) அல்லது Cibletudes.ca (பிரெஞ்சு) இணையத்தளத்தை நாடவும்.

படி 3 – பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்டக் கணக்கு ஒன்றைத் திறந்து, உங்கள் பதிவுக் கல்விச் சேமிப்புத் திட்ட வழங்குதரப்பின் உதவியுடன் கனடா பதிவுக் கல்விச் சேமிப்பு அடிபடை மானியம், கனடா பதிவுக் கல்விச் சேமிப்பு மேலதிக மானியம் மற்றும் கனடா கற்கை முறி விண்ணப்பப் படிவம் ஆகிய படிவங்களை நிரப்பவும்.

நான் எங்கே உதவி அல்லது மேலதிக விபரங்கள் பெறலாம்?

(ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்சில் மட்டும்)

அழைக்கவும்: 1 800 O-Canada (1-800-622-6232)
TTY/ATS (தொலைத்தட்டெழுத்துப்பொறி): 1-800-926-9105

இணையத்தளத்தை நாடவும்: CanLearn.ca (ஆங்கிலம்) அல்லது Cibletudes.ca (பிரெஞ்சு)

உங்களுக்கு அருகிலுள்ள கனடா சேவை நிலையத்துக்கு [Service Canada Centre / Centre Service Canada] செல்லவும்

ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் சேவை கிடைக்கும்

பின்வரும் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு இந்த வெளியீட்டை நீங்கள் தருவிக்கலாம்:

வெளியீட்டுச் சேவை மனித வளங்கள் மற்றும் திறன்கள் மேம்பாடு கனடா
Publishing Services / Services des publications
Human Resources and Skills Development Canada / Ressources humaines et Développement des compétences Canada
140 Promenade du Portage
Portage IV, 12e étage
Gatineau, Québec
K1A 0J9

தொலைநகல்: 819-953-7260

இணையத்தளம்: http://www12.hrsdc.gc.ca (ஆங்கிலம்) அல்லது http://www12.rhdcc.gc.ca (பிரெஞ்சு)

1 800 O-Canada (1-800-622-6232) என் னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, இந்த ஆவணத்தை நாடிக் கோரிக்கை விடுத்தால், இது மாற்று வடிவங்களில் (பெரிய அச்செழுத்திலோ, தொடுகை அச்செழுத்திலோ, ஒலிப்பேழையிலோ, இறுவட்டிலோ, மின்ம உரை வட்டிலோ, மின்ம உரை இறுவட்டிலோ, DAISY உருவிலோ) கிடைக்கும். நீங்கள் தொலைத்தட்டெழுத்துப்பொறி (TTY/ATS) பயனபடுத்துபவர் என்றால் 1-800-926-9105 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.

© பதிப்புரிமை: கனடாவின் ஆட்சியாளர் என்ற வகையில் மாட்சிமை தங்கிய அரசி, 2011

அச்சுப் பிரதி (ஆங்கிலம், பிரெஞ்சு) 
Cat. No./ Nº de cat.: HS28-22/2011
ISBN: 978-1-100-52669-0

PDF (ஆங்கிலம்)
Cat. No.: HS28-22/2011E-PDF
ISBN: 978-1-100-17546-1

PDF (பிரெஞ்சு)
Nº de cat.: HS28-22/2011F-PDF
ISBN : 978-1-100-96309-9